×

ஓபிஎஸ் போட்டியிட்ட போடி தொகுதியின் 3 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான ஓட்டுகளில் குளறுபடி: திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் புகார் மனு

தேனி: போடி தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு விபரங்களில் குளறுபடி உள்ளதாக, திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் புகார் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், போடி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று தேனி கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உண்ணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 14ம் தேதி நள்ளிரவு 1.30 அல்லது 2 மணியளவில் சுமார் 13 நிமிடங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான டிவி மானிட்டர் இயங்கவில்லை. மேலும் அவ்வப்போது மின்சாரம் சுற்றுவட்ட பாதையில் தடைபடுகிறது. எனவே யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் உதவியுடன் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். போடி தொகுதி 57 ஏ வாக்குச்சாவடி மையத்தில் 17 சி படிவத்தில் 583 வாக்குகள் பதிவானதாகவும், கலெக்டரின் அறிக்கையில் 602 வாக்குகள் எனவும் உள்ளது. முத்தையன்செட்டிபட்டி கள்ளர் பள்ளி 197வது வாக்குச்சாவடியில் 17 சி படிவத்தில் 578 வாக்குகள் பதிவானதாகவும், கலெக்டர் 538 வாக்குகள் பதிவானதாகவும் உள்ளது. சீலையம்பட்டி  280ம் எண் வாக்குச்சாவடியில் 783 வாக்குகள் பதிவானதாக  17 சி படிவத்தில் உள்ளது. ஆனால் கலெக்டர் இங்கு 873 வாக்குகள் பதிவானதாக கூறியிருக்கிறார். இந்த வாக்குப்பதிவு வித்தியாசத்தை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்….

The post ஓபிஎஸ் போட்டியிட்ட போடி தொகுதியின் 3 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான ஓட்டுகளில் குளறுபடி: திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : OPS ,Djagagam ,Dangadamychelvan ,Theni ,Dangadamishelvan ,Bodi ,Kazhagam ,GoldamySelvan ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...